இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது குறித்து அவர் கூறியது: எனது தம்பியின் மரணம் பெரும் வேதனை அளிக்கிறது. எனக்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டது அதிர்ச்சியாக உள்ளது. எனது தம்பியின் உடலைப் பார்க்க வேண்டும். அவர் பிறந்த ராமேசுவரம் மண்ணில்தான் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் குடும்பத்தினரின் விருப்பம். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
ராமேசுவரம் ஜமாஅத் தலைவர் அப்துல் ஹமீது: ராமேசுவரம் மண்ணில் பிறந்து நாட்டுக்காகப் பெருமை சேர்த்த அப்துல் கலாமின் இறப்பு, ஈடுகட்ட முடியாது. வேதனையும் பெரும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அவரது உடல் ராமேசுவரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.