பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 19 உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்துக்கு கல்லூரி கல்வி இயக்குனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி முதல்வர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எங்கள் கல்லூரியில் 19 உதவி பேராசிரியர்களை பல்வேறு தேதிகளில், சட்டவிதிகளை பின்பற்றி நியமித்தோம்.
இந்த நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு கல்லூரி கல்வி இயக்குனருக்கு கோரிக்கை மனு அனுப்பினோம். ஆனால், அவர் ஒப்புதல் அளிக்க மறுத்து மனுவை திருப்பி அனுப்பி விட்டார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ஓய்வு, ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாகும் போது, அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இந்த கல்லூரிகளில் 19 உதவி பேராசிரியர்கள் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் தராமல் பணி செய்ய சொல்ல முடியாது. எனவே, இந்த 19 பேரது பணி நியமனத்துக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். சென்னை உயர் நீதி மன்றத்தில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை கல்லூரி உதவி பேராசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.