Pages

Monday, July 20, 2015

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு முன்வர வேண்டும்.

மாநிலத்தில் 532 ஒன்றியங்களில் வட்டார வள மையங்கள் செயல்படுகின்றன. இதில் 6 ஆயிரத்து 302 பணியிடங்கள் உள்ளன. அதில் காலியாக ஆயிரத்து 718 பணியிடங்கள் உள்ளன. தலா ஒரு வள மையத்தில் ஆறு முதல் எட்டு ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளனர். 2013க்கு பின்பு பள்ளி கல்வித்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் பயிற்றுநர்களை அனுப்புவது நிறுத்தியுள்ளது.

ஆசிரியர் பயிற்றுநர்களை கலந்தாய்வுக்கு முன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். விடுமுறை நாட்களிலும் பணியில் ஈடுபடுவதால் பயணப்படியாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். பொது கலந்தாய்வில் 3 ஆண்டு பணி புரிந்தால் மட்டுமே பங்கேற்கலாம், என்பது வேதனையானது. ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கும் காலிப்பணியிடங்களை இணையத்தளத்தில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.