Pages

Saturday, July 25, 2015

ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்கள்.

'பள்ளிகளில் செயல்முறை, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தொடக்கக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 4 ம் வகுப்பு வரை செயல்வழி கல்விமுறை செயல்படுத்தப்பட்டது. 


இதில், அட்டைகள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதேபோல் 5 ம் வகுப்பில் எளிமை படைப்பாற்றலும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்விமுறையும் செயல்படுத்தப்பட்டது. இதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்து அதற்கு ஏற்ப கற்பிக்க வேண்டும்.'ஆசிரியர்களிடம் ஆர்வம் இல்லாததால் பெரும்பாலான பள்ளிகளில் செயல்வழி, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றுவதில்லை' என அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. 'இக்கல்வி முறையை பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்த கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் இணைந்து செயலாற்ற வேண்டும். அவற்றை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதனால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆய்வுகள் அடிப்படையில் கல்வியாளர்கள் கொண்டு வந்த செயல்வழி, படைப்பாற்றல் முறையை செயல்படுத்த ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இதை முழுமையாக பின்பற்றாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.