அரசு பள்ளிகளில், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு என்ற பெயரில், ரசீதே இல்லாமல், லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடந்துள்ளது. இதை எதிர்த்து மாணவ, மாணவியர் பட்டியலுடன், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
எச்சரிக்கை:அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், மாணவர்கள் சேரும் போது, அவர்களிடம் எந்த ரசீதும் தராமல், நன்கொடை வசூலிப்பது அதிகரித்து உள்ளது. 'நன்கொடை வசூலிக்கக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்தார்.ஆனாலும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணக்கே இல்லாமல் பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வசூல் வேட்டை நடந்துள்ளதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோருக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, பெற் றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
அரசு பள்ளியில், எக்காரணத்திற்காகவும், நன்கொடை வசூலிக்கக் கூடாது. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடம், தலா 4,500 ரூபாய்; ௬ம் வகுப்புக்கு, 500 - 1,000 ரூபாய்; 8ம், 9ம் வகுப்புக்கு, 3,500 ரூபாய் கட்டாய வசூல் செய்து, ரசீது வழங்காமல் ஏமாற்றுகின்றனர்.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும், 150 மாணவ, மாணவியர் லட்சக்கணக்கில் நன்கொடை செலுத்தியுள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.புகார்:சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த மாணவியரிடம், 800 - 5,000 ரூபாய் வரை, நன்கொடை வாங்கிக் கொண்டு, எந்த ரசீதும் வழங்கவில்லை என்றும், புகார் எழுந்து உள்ளது. பள்ளி நிர்வாகிகள் உதவியுடன், தனியார் சிலர், பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டு, வசூலில் ஈடுபடுவதாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களே, பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.