இசை, ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களுக்கு புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பாட வல்லுநர்கள், சிறப்பாசிரியர்கள் பங்கேற்கும் பயிலரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தொடங்குகிறது. இந்த 3 நாள் பயிலரங்கில் புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படிப்புகளுக்கான புதியப் பாடத்திட்டம் 2006-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட இருந்தது. ஆனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கோ, தலைமையாசிரியர்களுக்கோ பாடத் திட்டத்தின் நகல் எதுவும் அனுப்பப்படவில்லை.
இதன் காரணமாக, பாடத் திட்டமின்றியே சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சிறப்புப் பாடங்களுக்கான பாடத் திட்டம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் சிறப்புப் பாடங்களுக்கான பாடத் திட்டத்தை வெளியிட வேண்டும் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்புப் பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.