Pages

Saturday, July 11, 2015

பி.எட்., தேர்வு முடிவு இன்று வெளியீடு

பி.எட்., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் நடந்த, பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள், பல்கலை இணையதளமான, www.tnteu.inல், இன்று வெளியாகும்.மதிப்பெண்
பட்டியல், தற்காலிக சான்றிதழ் ஜூலை, 30ம் தேதிக்குப் பின், கல்லுாரிகள் வழியே வழங்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெற, தனித்தனி விண்ணப்பங்களை, ஜூலை, 24ம் தேதிக்குள், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பப் படிவங்களை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.