Pages

Monday, July 13, 2015

தொழிற் பட்டப்படிப்பு துவங்க காந்திகிராம பல்கலை தேர்வு

தமிழகத்தில் தொழிற் பட்டப்படிப்புகளை துவங்க காந்திகிராம பல்கலை உள்ளிட்ட 5 நிறுவனங்களை பல்கலை மானியக் குழு தேர்வு செய்துள்ளது.மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்கலை மானியக் குழு 'கவுஷல் கேந்திரா' திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் விவசாயம், தொழிசார்ந்த பட்டப் படிப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் 700 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன.


இதில் 48 கல்வி நிறுவனங்களை பல்கலை மானியக்குழு தேர்வு செய்துள்ளது. தமிழகத்தில் காந்திகிராம பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, சென்னை லயோலா, கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா கல்லுாரி, கன்னியாகுமரி விவேகானந்தா கல்லுாரி ஆகிய 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
காந்திகிராம பல்கலையில் பண்ணை கருவிகள் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு, காலணிகள் வடிவமைப்பு ஆகிய 2 தொழிற் பட்டப்படிப்புகள் துவங்கப்படுகின்றன. 
இவை இரண்டும் 3 ஆண்டு படிப்புகள். வாழ்நாள் கல்வித்துறை பேராசிரியர் வெங்கட்ரவி கூறியதாவது: தற்போது பொறியியல் துறையை தவிர மற்ற தொழிற்கல்விகள் பட்டய படிப்புகளாக உள்ளன. அவற்றை பட்டப்படிப்பாக தரம் உயர்த்தி மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் செய்முறை பயிற்சி அதிகம் இடம்பெறும். காந்திகிராம பல்கலையில் தொழிற் பட்டப்படிப்புகள் இந்த கல்வி ஆண்டிலே துவங்கப்படும். இதற்காக ரூ.3.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.