Pages

Monday, July 6, 2015

தமிழ் பல்கலைக்கழகம் B.Ed.,M.Ed 2015-2017 சேர்க்கைக்கான விண்ணப்பம் விளம்பரம் வெளியீடு

1 comment:

  1. மரணம் தவிர மாற்றுவழி இல்லையா - வெய்ட்டேஜால் ஏமாந்த ஆசிரியர்களின் குமுறல்
    2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏன் தான் தேர்ச்சி பெற்றேனோ???

    கடந்த ஆண்டு 2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அடுத்த மாதம் பணிநியமண ஆணை கிடைக்கும் என்ற கனவில் இருந்தேன்.. அக்கனவை இனி எப்போதுமே நனவாகமல் தடுத்து விட்டனர்.....

    உயர் இடத்தில் இருப்பவர்களுக்கு ஏழ்மைகளின் நிலை எப்படி தெரியும் :
    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏழைகளின் கல்வி நிலை எவ்வாறு தெரியும்... கிராமத்தில் அரசுப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் நடையாய் நடந்து உண்ண உணவின்றி கஷ;டப்பட்டு படித்து எடுத்த 800 மதிப்பெண்ணின் அருமை அவர்களுக்கு எவ்வாறு தெரியும்.. இந்த வெய்ட்டேஜ் முறை ஏதோ ஒரு உயர் வகுப்பினரின் கல்வி திறனை மையமாக வைத்து எங்களை போன்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்பட்டோரை புறக்கணிக்கும் விதமாகவே உள்ளது .


    குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது இயலாது:

    கஷடப்பட்டு படித்து தேர்ச்சிப்பெற்ற 2013ம ஆ;ணடு தேர்வுக்கே தெளிவான விடை இல்லை.. 2015 டெட்டு மட்டும் விதிவிலக்கா.... 2013ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் இப்போது தேர்வுக்கு புத்தகத்தை எடுத்து படித்தாலே கண்ணீர் வருகிறது.. இந் ஆட்சியின் ஆசிரியர்களால் மரணத்திலும் மறக்க முடியாத கொடுமை என்றால் அது வெய்ட்டேஜ் என்பது... உச்சநீதிமன்ற வழக்கு ஒருபுறம் இருக்க வெய்ட்டேஜ் கொடுமை ஒருபுறம் இருக்க குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எப்படி என தேர்வுக்கு படிக்க முடியாமல் திணறி வருகின்றனர்

    மரணம் தவிர மாற்று வழி இல்லையா?
    வெய்ட்டேஜ் கொடுமையை எதிர்த்து சாலைமறியல், உயர்நீதிமன்ற வழக்கு, ஆட்சியின் உயர்மட்ட வரை மனுக்கள், பேச்சுவார்த்தைகள், அறப்போராட்டம் என அனைத்தையும் அறங்கேறி பின்பு இவ்வழக்கு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.. நீதியின் ஒரு துளி எங்காவது இருக்குமா என்று கண்ணீர் துளிகளோடு காத்திருக்கும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்... மரணம் தான் முடிவென்றால் இந்த அரசு என்னை போன்ற ஆசிரியர்களுக்கு கருணைக்கொலையை அங்கீகரிக்க வேண்டும்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.