Pages

Monday, July 27, 2015

பி.இ. துணைக் கலந்தாய்வு: 31- இல் விண்ணப்பம் பதிவு

பொறியியல் சேர்க்கை துணைக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பி.இ. சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 31-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்ய வரும்போது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பிளஸ் 2 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.
 விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 250. எஸ்.சி.ஏ. இடங்களை நிரப்ப...: இதுபோல, பொதுக் கலந்தாய்வில் நிரப்பப்படாத எஸ்.சி.ஏ. இடங்களுக்கு தாழ்த்தப்பட்ட இன (எஸ்.சி.) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 விருப்பமுள்ள எஸ்.சி. மாணவர்கள் அன்றையதினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை வருகையைப் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, www.annauniv.edu  இணையதளத்தைக் காணலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.