ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை தினமும் 2 மணி நேரம் அதிகரித்து கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இம்மாவட்டத்தில், ராமநாதபுரம், பரமக்குடி என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் தினமும் காலை 9 முதல் 9.30 மணிக்குள் பாடவேளைகள் துவங்கும்.
மாலையில் 4 முதல் 4.30 மணிக்குள் பள்ளிகள் நிறைவடையும்.ஆனால், பிளஸ் 2, பத்தாம் வகுப்புகள் மட்டும் காலை 8.15 மணிக்கு துவங்கி, மாலை 5.30 வரை நடத்த வேண்டும், என மாவட்ட கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் கலெக்டர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் தர்மராஜ் கூறுகையில்,"" கிராமப் புறங்களை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் பல கி.மீ., தூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பஸ், சாப்பாடு, குடிநீர் இன்றியும் சிரமப் பட்டு வருகின்றனர். அவர்கள் காலை 8.15 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டு மானால், அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.
மாலை 5.30 மணிக்கு பள்ளி முடிந்து வீடு திரும்ப, பஸ்கள் வரும் நேரத்தைப் பொறுத்து இரவு 9 மணி வரை ஆகி விடும். இத்துடன் தினமும் தேர்வு பயிற்சி எழுத கூறுவதால், மாணவர்கள் படிக்க நேரமின்றி மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது.
ஆசிரியர்கள் அன்றைய தினம் நடத்த வேண்டிய பாடங்களை தயாரிப்பது, தேர்வு நடத்துவது, விடைத்தாள்களை திருத்துவதற்கு என நேரம் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது,'' என்றார். செயலாளர் சந்ததானகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.