Pages

Wednesday, July 8, 2015

குரூப் 2 தேர்வுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய நேர்முகத் தேர்வு உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்கு தகுதியான நபர்களை தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 05.09.2013-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. 


இப்பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 08.11.2014 மற்றும் 09.11.2014 ஆகிய நாட்களில் நடைப்பெற்றது.  இப்பதவிகளுக்கான  நேர்காணல் 15.07.2015 முதல் 08.08.2015 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணலுக்கு  அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் 02.07.2015 அன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  நேர்காணல் நடைபெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய  அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அழைப்புக்கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.