Pages

Thursday, July 2, 2015

தனியார், அரசு நிதி உதவி பெறும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை தமிழ்நாடு தனியார் கல்லூரிகளின் ஒழுங்குமுறை விதிகள் 1976–ன் படி நிரப்ப தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று ஐகோர்ட்டில் ஓய்வுப் பெற்ற பேராசியர் ஐ.இளங்கோவன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், ‘இந்த வழக்கிற்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தனியார் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி.பிரிவுகளில் ஆசிரியர்கள் பணியில் 213 காலிப் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத பணியில் 111 காலிப் பணியிடங்களும் உள்ளன. இது தவிர, அனைத்துப் பிரிவுகளின் கீழ் ஆசிரியர் பணியில் 1478 காலிப் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாதப் பணியிடங்களில் 1673 பணியிடங்களும் காலியாக உள்ளன என்று கூறியுள்ளது. எனவே, காலியாக உள்ள இந்த பணியிடங்கள் அனைத்தையும் இந்தக் கல்வியாண்டுக்குள் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்‘ என்று உத்தரவிட்டுள்ளனர்.

மாணவர்கள், பெற்றோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் அங்கீகாரம் இன்றி இயங்கி வரும் 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியல் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் எந்தவித பட்டங்களை வழங்கவும் யுஜிசி அனுமதி வழங்கவில்லை. எனவே, இவற்றின் சார்பில் வழங்கப்படும் அனைத்துப் பட்டங்களும் அங்கீகாரம் அற்றவை எனவும் யுஜிசி அறிவுறுத்தியிருக்கிறது. 
 இதில் அதிகபட்சமாக 8 போலி பல்கலைக்கழகங்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்திலும், 6 போலி பல்கலைக்கழகங்களுடன் தில்லி இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் ஒரே ஒரு போலி பல்கலைக்கழகம் இருப்பதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது. 
 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் 
 உத்தரப்பிரதேசம்: 
 மஹிலா கிராம் வித்யபீத் மகளிர் பல்கலைக்கழகம் - அலாகாபாத் 
 காந்தி ஹிந்தி வித்யபீத் - அலாகாபாத் 
 ஹோமியோபதி நேஷனல் பல்கலைக்கழகம் - கான்பூர் 
 நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் திறந்தநிலை பல்கலைக்கழகம் - அலிகரி
 உத்தர் பிரதேஷ் விஸ்வவித்யாலயா - மதுரா
 மஹாரானா பிரதாப் ஷிக் ஷா நிகேதன் விஷ்வவித்யாலயா - பிரதாப்கர் 
 இந்திரபிரசாத ஷிக் ஷா பரிசத் - நொய்டா
 குருகுல் விஸ்வவித்யாலய விருந்தாவன் } மதுரா
 புது தில்லி: 
 வாரணாசிய சம்ஸ்கிருத விஸ்வவித்யாலயா 
 வணிகவியல் பல்கலைக்கழக நிறுவனம் - தரியாகஞ்ச்
 யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம் 
 வொக்கேஷனல் பல்கலைக்கழகம் 
 ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிக்கல் பல்கலைக்கழகம் 
 இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்டு என்ஜினீயரிங்
 கர்நாடகம்: 
 பதகான்வி சர்கார் வொர்ல்ட் திறந்தநிலை பல்கலைக்கழகம் - பெல்காம்
 மேற்கு வங்கம்: 
 இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஆல்டர்நேடிவ் மெடிசின் - கொல்கத்தா
 தமிழகம்: டி.டி.பி. சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் - புதூர், திருச்சி
 பிகார்: மைதிலி பல்கலைக்கழகம் - தர்பங்கா
 கேரளம்: செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம் - கிஷநத்
 மத்திய பிரதேசம்: ஜபல்பூர் கேசர்வானி வித்யபீத்
 மகாராஷ்டிரம்: நாகபுரி ராஜா அரபிக் பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.