முதல்வர் அழைத்து பேசவில்லை என்றால் வரும் அக்டோபர் 12ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் அவசர சிறப்பு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாநில தலைவர் கணேசன், மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் அலுவலக உதவியாளர், இரவு காவலர், சமையலர், மருத்துவமனை பணியாளர் உளளிட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளில் பணிபுரியும் பம்ப் ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம், கல்வி தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் 3 மாதத்துக்கு ஒருமுறை அரசு பணியாளர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் கூட்டு மன்ற குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் நீண்டகாலமாக சங்கம் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக தலைமையிலான அரசு கடந்த 4 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு தடவை கூட முதல்வர் தரப்பில் அழைத்து பேசவில்லை.
எனவே, இனி வரும் காலங்களிலாவது அரசு பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அனைத்து சங்க தலைவர்களையும் முதல்வர் அழைத்து பேச வேண்டும். இல்லையெனில், வரும் அக்டோபர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் அரசு பணியாளர்களை ஒன்று திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.