தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1093 உதவி பேராசிரியர்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் :(டி.ஆர்.பி.,) சார்பில் 15.3.2012ல், 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பி.எச்டி., அல்லது 'நெட்', 'ஸ்லெட்' தகுதியாக வைத்து ஆசிரியர் பணி அனுபவம், உயர் கல்வி படிப்பு தகுதி மற்றும் கூடுதல் தகுதி, நேர்காணலுக்கு என தனித்தனி மதிப்பெண் வழங்கி, 'வெயிட்டேஜ்' முறையில் 25.11.2013ல் சான்றிதழ் சரிபார்ப்பும் அதை அடுத்து நேர்காணலும் நடத்தப்பட்டது.
இதன்பின் அனைத்து பாடப் பிரிவுக்குமான இறுதி தேர்வு பட்டியல் விவரம் இந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. ஆனால் பணி நியமன உத்தரவுகள் இன்னும் வழங்கவில்லை. அதற்கான அறிகுறி தெரியவில்லை. உயர்கல்வித் துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் கூறியதாவது:
தேர்வு பட்டியல் வெளியானவுடன் அரசு பணி என்பதால் இதற்கு முன் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்த தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் பணியை ராஜினமா செய்து விட்டோம். பட்டியல் வெளியானவுடன் உத்தரவு கிடைத்து விடும் என எதிர்பார்த்தோம். நடக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, ஜாமின், விடுதலை என அடுத்தடுத்த நிகழ்ச்சிக்கு பின் உத்தரவுகள் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். இன்னும் கிடைத்தபாடில்லை. இதனால் குடும்ப பொருளாதார சூழ்நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
டி.ஆர்.பி., தரப்பில் கேட்டால் 'கவலை வேண்டாம் விரைவில் உத்தரவு வரும்' என கூறுகின்றனர்.
இதற்கிடையே மாற்றுப்பணிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வித் துறை இதில் கவனம் செலுத்தி விரைவில் பணிநியமனம் வழங்க வேண்டும் என்றனர்.
மரணம் தவிர மாற்றுவழி இல்லையா - வெய்ட்டேஜால் ஏமாந்த ஆசிரியர்களின் குமுறல்
ReplyDelete2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏன் தான் தேர்ச்சி பெற்றேனோ???
கடந்த ஆண்டு 2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அடுத்த மாதம் பணிநியமண ஆணை கிடைக்கும் என்ற கனவில் இருந்தேன்.. அக்கனவை இனி எப்போதுமே நனவாகமல் தடுத்து விட்டனர்.....
உயர் இடத்தில் இருப்பவர்களுக்கு ஏழ்மைகளின் நிலை எப்படி தெரியும் :
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏழைகளின் கல்வி நிலை எவ்வாறு தெரியும்... கிராமத்தில் அரசுப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் நடையாய் நடந்து உண்ண உணவின்றி கஷ;டப்பட்டு படித்து எடுத்த 800 மதிப்பெண்ணின் அருமை அவர்களுக்கு எவ்வாறு தெரியும்.. இந்த வெய்ட்டேஜ் முறை ஏதோ ஒரு உயர் வகுப்பினரின் கல்வி திறனை மையமாக வைத்து எங்களை போன்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்பட்டோரை புறக்கணிக்கும் விதமாகவே உள்ளது .
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது இயலாது:
கஷடப்பட்டு படித்து தேர்ச்சிப்பெற்ற 2013ம ஆ;ணடு தேர்வுக்கே தெளிவான விடை இல்லை.. 2015 டெட்டு மட்டும் விதிவிலக்கா.... 2013ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் இப்போது தேர்வுக்கு புத்தகத்தை எடுத்து படித்தாலே கண்ணீர் வருகிறது.. இந் ஆட்சியின் ஆசிரியர்களால் மரணத்திலும் மறக்க முடியாத கொடுமை என்றால் அது வெய்ட்டேஜ் என்பது... உச்சநீதிமன்ற வழக்கு ஒருபுறம் இருக்க வெய்ட்டேஜ் கொடுமை ஒருபுறம் இருக்க குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எப்படி என தேர்வுக்கு படிக்க முடியாமல் திணறி வருகின்றனர்
மரணம் தவிர மாற்று வழி இல்லையா?
வெய்ட்டேஜ் கொடுமையை எதிர்த்து சாலைமறியல், உயர்நீதிமன்ற வழக்கு, ஆட்சியின் உயர்மட்ட வரை மனுக்கள், பேச்சுவார்த்தைகள், அறப்போராட்டம் என அனைத்தையும் அறங்கேறி பின்பு இவ்வழக்கு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.. நீதியின் ஒரு துளி எங்காவது இருக்குமா என்று கண்ணீர் துளிகளோடு காத்திருக்கும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்... மரணம் தான் முடிவென்றால் இந்த அரசு என்னை போன்ற ஆசிரியர்களுக்கு கருணைக்கொலையை அங்கீகரிக்க வேண்டும்