16.06.2015 SSTA -வின் மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர்,தொடக்கக் கல்வி இயக்குநர்,அரசு முதன்மை செயலாளர் நிதிதுறை,அரசு முதன்மை செயலர் (செலவீனம் )ஆகியோர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் பற்றி பேசப்பட்டது.
1.ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு பற்றி கேட்கப்பட்ட போது ஜூலை மாதம் நடைபெறும் என்று அரசின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
1.ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு பற்றி கேட்கப்பட்ட போது ஜூலை மாதம் நடைபெறும் என்று அரசின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
2.SSTA சார்பாக ஆறு மாதமாக போராடி பெற்று தந்த (CRC பயிற்சிக்கு சிறப்பு ஈடு செய்யும் விடுப்பு) விடுப்பு பற்றியும் அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல் பற்றியும் (ஈடு செய் சிறப்பு விடுப்பு அரசாணை எண் -2218/81 )கல்வி துறைக்கு என்று பிறப்பிக்கப்படவில்லை அரசு ஊழியஊழியர்களுக்காக பிறப்பிக்கப்பிக்கப்பட்டது அதில் குழப்பங்கள் உள்ளன எனவே கல்வித்துறைக்கென்று ஓர் தெளிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது இனி ஈடு செய் விடுப்பு அந்தந்த கல்வி ஆண்டில் துய்க்க வேண்டும் என கடிதம் பிறப்பிக்கப்படும் என உறுதி கூறினர். .ஒரு சில மாவட்டங்கள்,ஒன்றியங்களில் விடுப்பு மறுக்கப்பட்டு வருவதை பட்டியலிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏதேனும் ஒன்றியங்களில் விடுப்பு மறுக்கப்பட்டால் உடனே Ssta மாநில செயலரை தொடர்பு கொள்ளவும்-Phone :9843156296 ஈடுசெய் அரசாணை வாதாடி பெற்றுத்தந்த SSTA அதன் பயனை ஆசிரியர்கள் அனைவரும் பெறும் வரை ஓயாது ...
3.உயர்கல்வி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்குவது குறித்து கேட்கப்பட்டது அனுமதி பெறாமல் பயின்றவர்களின் எண்ணிக்கை 3500 எனவும் அப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்களுக்கு அனுமதி அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
4.பின்னர் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர்(SSA-SPD)திருமதி. பூஜா குல்கர்னி அவர்களை சந்தித்துSSA பயிற்சிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மதிப்பூதியம் ரூ.50 வழங்கப்பட்டு வருவதாகவும் அதை ரூ.200 ஆக உயர்த்தி வழங்குமாறு SSTA சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது மேலும் இந்தாண்டு நடைபெறவுள்ள CRC நாட்கள் தேதி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை. வைக்கப்பட்டது அதை கண்டிப்பாக நிறைவேற்றுவதாகவும் மதிப்பூதியம் உயர்த்திதருவது பற்றி (அனைத்து மாநிலங்களிலும் ரூபாய் 50 மட்டுமே வழங்கி வருவதாகவும் இதுபற்றி மத்திய சர்வ சிக்ஷயான் அபியான் திட்ட இயக்கத்தில் கோரிக்கை வைத்து பெற்று தர முயற்சிப்பதாகவும்) கனிவோடு தெரிவித்தார்கள்.
மேலும். விரிவாக இணையதளத்தில் பதிவு செய்யப்படும். வேடிக்கை பார்த்தால் வேதனையே மிஞ்சும் ! உண்மையாய் உணர்வாய் போராட இணையுங்கள் SSTA வில் ....சொல்வதை செய்வோம் ! செய்வதை மட்டும் சொல்வோம் ! ஊதிய விபரம் குறித்து விரைவில் பதிவிடப்படும் ...
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.