Pages

Thursday, June 18, 2015

ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும்

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நியமனம் செய்ய வேண்டும் என்று  அன்புமணி வலியுறுத்தினார்.இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் நியமனம் நேர்முகத் தேர்வில் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இது, கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைக்கு மாறானது. கண்டனத்துக்குரியது.இந்த முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நேர்காணலில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் ஆய்வக உதவியாளர்களை பணி நியமனம் செய்வோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.எனவே, ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆய்வக உதவியாளர்களைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.