பொது இ - சேவை மையங்களில், அடுத்த மாதம் முதல், முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட, நான்கு சேவைகளை சேர்க்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், 7,200 பொது இ - சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை, கூட்டுறவுச் சங்கங்கள், 'எல்காட்' நிறுவன மாவட்ட மையங்கள், அரசு கேபிள், 'டிவி' மையங்கள், மற்றும் 2,000 வறுமை ஒழிப்பு மையங்கள் நிர்வகித்து வருகின்றன. இ - சேவை மையங்களில், வருவாய் மற்றும் சமூகநலத் துறையால் வழங்கப்படும், சாதிச்சான்று, வருமானச் சான்று, பட்டதாரி அல்லாத சான்று, திருமண உதவித் திட்டங்களுக்கான சான்று உட்பட, 11 சேவைகளுக்கு, பொதுமக்கள், ஆன் - லைனில், மனு செய்து பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால், தாலுகா அலுவலகங்களில், அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
இந்த மையங்களில், ஜூலை மாதம் முதல், மேலும் நான்கு சேவைகளை சேர்க்க, அரசு முடிவெடுத்து உள்ளது. அதன்படி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்
களுக்கான சான்று, வாரிசு சான்றுகளை, ஆன் - லைனில் மனு செய்து பயனடையலாம். இதுதவிர, துயர் துடைப்பு நிதியை பெற விரும்புவோரும், மனு செய்யலாம். நான்கு சேவைகளை சேர்ப்பதற்கான பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அவர்கள், அதற்கான சாப்ட்வேரை தயாரித்து வருகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.