Pages

Monday, June 29, 2015

பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்

கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில் பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான காலஅளவு இரண்டு ஆண்டுகளாகிறது. தேசிய கவுன்சில் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அமலாகிறது.


இதற்காக பி.எட்., கல்லுாரிகளில் அமல்படுத்தவேண்டிய புதிய நடைமுறைகளை விளக்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவந்தர் ஜி.விஸ்வநாதன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.

நேற்று நெல்லை ஜான்ஸ் கல்லுாரியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவருடன் பல்கலையின் பதிவாளர் கலைச்செல்வன், தேர்வாணையர் மணிவண்ணன் ஆகியோர் இருந்தனர். கூட்டத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்வியியல் கல்லுாரிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்..

புதிய விதிமுறைகள் குறித்து துணைவேந்தர் பேசியதாவது;பி.எட்., முதலாம் ஆண்டில் 9 பாடங்களும், இரண்டாம் ஆண்டில் 7 பாடங்களும் இருக்கவேண்டும். எம்.எட்., வகுப்புகளில் ஒவ்வொரு ஆண்டிலும் 6 பாடங்கள் இருக்கவேண்டும். செய்முறைப்பயிற்சி 40 நாட்களில் இருந்து 100 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.