சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப் பல்கலைக்கழக 2015-16ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம், பி.எஸ்சி விவசாயம், தோட்டக்கலை, பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை கையேடு, விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப ஜூன் 22 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என பதிவாளர் ஜெ.வசந்தகுமார் தெரிவித்தார்.
முன்னதாக, விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 12 என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
கலந்தாய்வு தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் பார்க்கவும். மேலும்,auregr@ymail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும், உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144-238348, 238349 ஆகியவற்றையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.