சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் கொண்டு வரும் மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு இனி மைனாரிட்டி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதாவது, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தை சார்ந்தவர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள் சிறுபான்மையினத்தவராக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற சிறுபான்மையினத்தவர்கள் எவ்வித மைனாரிட்டி சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. மாறாக, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் சுய-கையொப்பமிட்ட சாதிச் சான்றிதழை வைத்திருந்தாலே போதுமானது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக, சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் அபிடவிட்டுகளை சமர்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. இந்நிலையில், இனி அரசின் அத்தனை துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் சுய-கையொப்பமிட்ட சாதிச்சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மைனாரிட்டி சானறிதழ்களை வைத்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.