Pages

Wednesday, June 10, 2015

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டுக்கான முதல் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

கூட்டதிற்க்கு வந்திருந்தோரை மாணவி தனம் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பெற்றோர் முன்னிலையில் பேச்சு போட்டி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு பெற்றோர்கள் தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்  முருகன், பாலசுப்ரமணியன் ,மகேஸ்வரி,கீதா ஆகியோர் பரிசு வழங்கினார்கள்.மாணவர்களை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்புவது,தினசரி வீட்டு பாடங்களை பெற்றோரும் சரி பார்ப்பது,மாணவர்களை போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி பெற செய்ய ஆசிரியர்களுடன் பெற்றோரும் ஒத்துழைப்பது,அரசு வழங்கும் விலையில்லா பொருள்களை கவனமாகவும் ,பாதுகாப்பாகவும் வைத்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும்  பெற்றோர்களிடம் கேட்டு கொள்ளுதல்,அழை பேசியை சரியான முறையில் பயன்படுத்துவது தொடர்பாக மாணவர்களிடமும் எடுத்து கூறுவது தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .ஆசிரியை சாந்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.மாணவி முத்தழகி நன்றி கூறினார்.

படவிளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ஆறுமுகம் பரிசுகளை வழங்கினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.