Pages

Thursday, June 11, 2015

பள்ளியில் ஆபாச பேச்சு: கணித ஆசிரியர் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய கணித ஆசிரியரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருப்புவனம் அருகே சொட்டதட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மதுரை தத்தனேரியைச் சேர்ந்த கருப்பசாமி(48). 
இவர் வகுப்பு நேரத்தில் மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை பள்ளி தலைமையாசிரியை விஜயாவிடம் மாணவிகள் தெரிவித்தனர்.
விஜயா அளித்த புகாரின்பேரில், மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா, சார்பு-ஆய்வாளர் அல்லிராணி ஆகியோர் கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.