Pages

Monday, June 1, 2015

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வெட்டிக் கொலை

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவாரூர் விளமல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சி.வேணுகோபால்(56). இவர் கொரடாச்சேரியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார்.

 ஞாயிற்றுக்கிழமை மாலை வேணுகோபால் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளம் வடகரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
 வெட்டுக் காயங்களுடன் வேணுகோபால் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குள் ஓடினார். இதையடுத்து அங்கிருந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 108 ஆம்புலென்ûஸ வரவழைத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேணுகோபாலை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேணுகோபாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக வேணுகோபால் கொலை செய்யப்பட்டிருக்கலாமென போலீஸார் தெரிவித்தனர்.


1 comment:

  1. இது போன்ற சம்பவங்களை வெளியிடுவது தேவையற்றது. கடமையை செய்வதில் ஒருஅலுவலா் துன்பம் அடைந்தால் அது குறித்து செய்திகள் வெளியிட வேண்டும். கொலை போன்ற செய்திகள் கல்விக்கான இணையதளத்தில் வெளியிடுவது பொருத்தமற்றது.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.