எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு நாளை முதற்கட்ட கலந்தாய்வு துவங்குகிறது; 4,800 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் அரங்கிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது;
ஞாயிற்றுக் கிழமையும் கலந்தாய்வு உண்டு.எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 2257; எட்டு சுயநிதி கல்லூரிகளில் 551 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.'மறுகூட்டல் மறுமதிப்பீட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதற்கான சான்றுகளை கட்டாயம் எடுத்து வர வேண்டும்' என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் தெரிவித்து உள்ளார்.
கலந்தாய்வு தேதி, 'கட் - ஆப்' விவரம்
19ம் தேதி, விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
தேதி பிரிவு 'கட் - ஆப்'
20 பொது 200 - 198.25
21 பொது 198.25 - 197.50
22 பொது 197.50 - 197.00
23 பொது 197.00 - 196.25
24 பி.சி., 196.50 - 196.25 - பி.சி., (மு) 196.50 - 195.00 - எம்.பி.சி., 196.50 - 195.50 - எஸ்.சி., 196.50 - 192.00
25 எஸ்.சி., 192.00 - 190.50 - எஸ்.சி., (அ)196.50 - 186.75 - எஸ்.டி., 194.25 - 180.25
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.