பள்ளிகளில் இருந்து போக்குவரத்து கழகங்களுக்கு, பஸ் பாஸ் பெறும் மாணவர்களின் பட்டியல் வந்து சேராததால், பஸ் பாஸ் தயாரிக்கும் பணி துவங்கவில்லை. இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால், பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பயணிக்க, வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ்2வரை, அரசுபள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, 'ஸ்மார்ட் கார்டு' ஆக, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்தாண்டு, பஸ் பாஸ் அட்டையில், மாணவர்களின் ரத்த பிரிவு குறித்த தகவலும் சேர்க்கப்படுகிறது; இந்த பணியை, பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். இந்த பணி முடிவடையாத நிலையில், பள்ளிகள் திறந்த பின், மற்ற மாணவர்களிடம் ரத்த பிரிவு குறித்த தகவலை சேகரிக்க உள்ளனர்.
அதன்பின்னே, போக்குவரத்து கழகங்களுக்கு, பெயர் பட்டியல் அனுப்ப உள்ளனர். ஆக, பஸ் பாஸ் தயாரித்து வழங்கும் பணி துவங்க, சில மாதங்களாகும் என, தெரிகிறது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளிகளில் இருந்து, எங்களுக்கு பட்டியல் முழுமையாக வந்து விட்டால், பஸ் பாஸ் தயாரித்து வழங்கும் பணியை, விரைவில் முடித்து விடுவோம். பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி பயணிக்கலாம். பள்ளி சீருடையில் வந்தாலே, பஸ்சில் இலவசமாக அனுமதிக்கும்படி, நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.