காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பரத்குமார், எம்.பாலாஜி, எம்.அபுதாகீர், அருண்குமார், 8-ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ் ஆகியோர் தங்களது கிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கணினிப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, இவர்கள் கணினியில் எம்.எஸ்.வேர்டு, பவர் பாய்ன்ட், போட்டோ ஸ்டோர் டு மூவி மேக்கர் ஆகிய பல்வேறு மென்பொருள்களில் சிறந்து விளங்கினர். இவர்கள், தங்களது வீட்டின் அருகே உள்ள ஏழை மாணவர்களுக்கு கணினி தொடர்பான பல்வேறு பயிற்சிகளை இலவசமாக பயிற்றுவித்து வருகின்றனர்.
மாணவர்களின் சேவையைப் பாராட்டிய பள்ளி ஆசிரியர்கள், அவர்களுக்கு மடிக்கணினி வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினர். மேலும், மாணவர்களின் செயலைப் பாராட்டிய பள்ளிக் கல்வித் துறை, மாநில கல்வித் துறை அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மாணவர்களை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
மாணவர்களின் சேவை மனப்பான்மையை ஊக்கப்படுத்தி பெரியோர்கள் அவர்களை வழி நடத்துதல் வேண்டும்.
ReplyDelete