Pages

Monday, June 15, 2015

அண்ணா பல்கலை 'ரேண்டம்' எண் இன்று வெளியீடு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரி களில், புதிய கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறையில், மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு, 1.90 லட்சம் பேர் விண்ணப்பங்கள் வாங்கினர். இதில், ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 545 பேர் விண்ணப்பித்தனர்.பரிசீலனை முடிந்து, மாணவர்களுக்கான சமவாய்ப்பு, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலையின் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, 'ரேண்டம் எண்' வெளியீடு துவங் கும் என, தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலரும், அண்ணா பல்கலை பேராசிரியருமான ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்து உள்ளார். 


இந்த எண், அந்தந்த விண்ணப்ப எண்களுடன், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். வரும், 19ம் தேதி, 'கட் - ஆப்' அடங்கிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 'ரேண்டம்' எண், சில மாணவர்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை என்ற பிரச்னையை சமாளிக்க, இந்த முறை பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு, 1.90 லட்சம் பேரில், ஐந்து பேருக்கு மட்டுமே, 'ரேண்டம் எண்' பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்டது.

கணக்கீடு எப்படி?

முதலில் கணிதத்தில் யார் அதிக மதிப்பெண் என, பார்க்கப்படும். அதில், சமமாக இருந்தால் இயற்பியல்; அதில் சமமாக இருந்தால் வேதியியல், பின், நான்காம் பாட மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும். இதில், அதிக மதிப்பெண் பெறுபவருக்கு தரவரிசையில் முன்னுரிமை தரப்படும். நான்கு பாடங்களிலும் மதிப்பெண் சமமாக இருந்தால், பிறந்த தேதி சரிபார்க்கப்பட்டு, மூத்தவருக்கு முன்னுரிமை தரப்படும். அதிலும் சமமாக இருந்தால், 'ரேண்டம் எண்' பயன்படுத்த முடிவு செய்யப்படும். இந்த ரேண்டம் எண்ணில் யார் அதிக எண்ணிக்கை பெறுகிறாரோ, அவருக்கு தர வரிசையில் முன்னுரிமை கிடைக்கும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.