Pages

Saturday, June 13, 2015

ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா?; கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில், இலவசப் பொருட்கள் வழங்குதல், ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும்' என, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:


* ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலரும், ஜூன் முதல் ஏப்ரல் வரை, குறைந்தது, ஒரு மாதத்தில், 18 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
* மாணவர், ஆசிரியர் வருகைப் பதிவேடு, இலவசத் திட்டங்களின் செயல்பாடு, பயனாளிகளின் விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என, பார்க்க வேண்டும்; அதன் நகலைப் பெற வேண்டும்.
* பள்ளியில், ஒரு வேலைநாள் முழுவதும் இருந்து, பள்ளியின் நடவடிக்கை, ஆசிரியரின் கற்பித்தல், மாணவரின் கற்றல், கட்டமைப்பு வசதி, தேர்ச்சி விகிதம், குறைபாடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்ய வேண்டும்.
* மாணவர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்க வேண்டும்.
* கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் பராமரிப்பு நிலை, கணினி உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடுகள் குறித்து கண்டறிய வேண்டும்.
* ஆபத்தை ஏற்படுத்தும் திறந்தவெளிக் கிணறுகள், இடிந்த, இடியும் நிலைக் கட்டடங்கள், உயரழுத்த மின் கம்பங்கள் போன்றவற்றால் பிரச்னை இருந்தால், உடனடியாக அறிக்கைத் தாக்கல் செய்து, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.