Pages

Tuesday, June 16, 2015

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் இரா.குருமூர்த்தி அவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் (கணிதம் தவிர) you tube லிருந்து பதிவிறக்கம் செய்து பாடபகுதிக்குரிய விளக்கங்களுடன் தொகுத்து குறுந்தகடுகளில் பதிவு செய்துள்ளார்.


இவர் தயாரித்த குறுந்தகடுகளை தமிழ்நாடு முழுவதும் பல ஆசிரியர்கள் பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். "

இந்த குறுந்தகடுகள் , ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை எளிதாக்கி உள்ளது எனவும் , சிறந்த கற்றல்-கற்பித்தல் துணைக்கருவியாக உள்ளது எனவும் பாராட்டியுள்ளனர்".

மேலும் வார்த்தைகளால் விளக்கமுடியாத பல கருத்துகள் வீடியோ வடிவில் உள்ளன.

திரு.குருமூர்த்தி அவர்களின் இரண்டு வருட உழைப்பில் உருவான இந்த குறுந்தகடுகள் ஆசிரியர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் மிக குறைந்த விலையில் கொடுத்து வருகிறார்.

6 குறுந்தகடுகளின் விலை ரூ.230/- மட்டுமே ( குரியர் செலவு உட்பட ).

ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி குறுந்தகடுகள்.4 ஆம் வகுப்புக்கு மட்டும் இரண்டு குறுந்தகடுகள்.

குறுந்தகடுகள் வாங்க விரும்புவோர் திரு.குருமூர்த்தி அவர்களின் அலைபேசி எண்ணான 9791440155 க்கு தொடர்பு கொள்ளவும்.

இத்தகவலை பிற ஆசிரியர்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இச்செய்தியை பகிரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.