Pages

Wednesday, June 3, 2015

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு இணைய வழி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி: 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒப்படைக்கலாம்.


கலந்தாய்வு விவரம்: சிறப்புப் பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள்) ஜூலை 1-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும். ஆங்கில மொழியில் பயில விண்ணப்பித்துள்ள மாணவிகள், சிறுபான்மை மொழியில் பயில விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூலை 2-ஆம் தேதியும், தொழிற்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 3-ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும்.

கலைப்பிரிவினருக்கு ஜூலை 4, 6 ஆகிய தேதிகளிலும் அறிவியல் பிரிவினருக்கு ஜூலை 7,8,9,10 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.