Pages

Wednesday, June 10, 2015

7 ஆயிரம் நர்ஸ் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள, 7,000 நர்ஸ்கள் இடத்திற்கு, 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு, வரும் 28ம் தேதி நடக்கிறது.


அரசு மருத்துவமனையில், டாக்டர் பற்றாக்குறை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 2,176 டாக்டர்கள் தேர்வு செய்யப் பட்டனர். தொடர்ந்து, ’நேரில் வந்தால் போதும்; தேர்வு’ என்ற அடிப்படையில், எந்த தேர்வுமின்றி, 400 எம்.எஸ்., - எம்.டி., முடித்த சிறப்பு பிரிவு டாக்டர்கள் சேர்க்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து, 451 ஆண் நர்ஸ்கள் உட்பட, 7,243 நர்ஸ்களை, தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்க்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு, ’ஆன் லைன்’ வழியே விண்ணப்பிக்க வேண்டும். 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், ஐந்தில், ஒருவருக்கு தான் பணி கிடைக்க உள்ளது.  

இதற்கு தகுதியானோர் யார் என்பதற்கான எழுத்துத் தேர்வு, இம்மாதம், 28ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகளில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில், முதன் முறையாக, நர்ஸ் பணிக்கு, அரசு தகுதித் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.