Pages

Wednesday, June 24, 2015

சத்துணவு மையங்களில் 42 ஆயிரம் பணியாளர் தேவை

தமிழகத்தில், பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில், காலியாக உள்ள, 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர் நல சங்க மாநில தலைவர் வரதராஜன் கூறியதாவது:அரசு திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய பணியில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நான்கு ஆண்டுகளாக, காலி பணியிடங்களை நிரப்பவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களை கவனிப்பதால், அரசின் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

சத்துணவு திட்டத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெரம்பலுார், ராமநாதபுரம் மாவட்டங்களில், சத்துணவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில், காலியான பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில், நேர்முகத்தேர்வும் நடக்கிறது' என்றார்.


மாவட்டங்கள் 32
சத்துணவு மையங்கள்  43,000
பயனாளிகள்  5.50 லட்சம்
மாணவ, மாணவியர்
சத்துணவு அமைப்பாளர்கள்  42,423
சமையல் உதவியாளர்கள்  42,855
சமையலர்கள்  42,855
மொத்த பணியிடங்கள்  1.28 லட்சம்
காலி பணியிடங்கள்  30,925
அங்கன்வாடி காலி பணியிடங்கள்
அங்கன்வாடி பணியாளர்   4,689
குறு அங்கன்வாடி பணியாளர்  1,168
உதவியாளர்  6,000

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.