கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூலை 2-இல் ஆர்ப்பாட்டமும், 22-இல் பேரணியும் நடைபெற உள்ளதாக, அதன் பொதுச்செயலர் ரா.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடலூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக பதவியேற்றால் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. வரும் 2016ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றாலும், பிப்ரவரி மாதமே அதற்கான பணிகள் தொடங்கி விடும். எனவே எங்களது கோரிக்கைகளை தீவிரமாக வலியுறுத்த வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.
இதற்காக ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜூலை 22 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.
அதன் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 2003 ஆம் ஆண்டு நடந்தது போன்று தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.
நன்கு சிந்தித்து வாக்களியுங்கள் ஆசிரிய நண்பர்களே.
ReplyDelete