Pages

Wednesday, May 20, 2015

தனது உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென நினைக்கும் தேர்தல் ஆணையம்; RTE விதிகளை கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?

தனது உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் தேர்தல் ஆணையம், இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்ட விதிகளின் நோக்கங்களை கவனத்தில் கொள்ளாமல், ஆசிரியர்களின் Classroom responsibilities -களில் இருந்து ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு 27-ன் அடிப்படை நோக்கமே நிறைவேற்றப்படாமல் சிதைக்கப்பட்டுள்ளது. பிரிவு 27-ல் "No teacher shall be deployed for any non-educational purposes other than the decennial population census, disaster relief duties or duties relating to elections to the local authority ........

இதற்கு விளக்கமாக மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் School Education பிரிவில் "Clarification on Provisions " என்ற தலைப்பில் உள்ள விளக்கத்தில் that teachers are not deployed for work that takes them away from their classroom responsibilities என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தேர்தல் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் வருவதால் தான், ஆசிரியர்களை கல்வி சாரா பணிகளில் பயன்படுத்த தடை விதிக்கும் போது தேர்தல் பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விதிகளும் விளக்கமும் இவ்வாறு இருக்க duties relating to elections என்ற வரிகளைப் பயன்படுத்தி, எப்பொழுதும் ஆண்டு முழுவதும் செய்யக்கூடிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் (Booth Level Officer - BLO) என்ற பணியை ஆசிரியர்களுக்கு வழங்கி இலவச கட்டாய கல்வி உரிமை சட்ட விதி கேள்விக்குரியதாக மாறியுள்ளது. இப்பணிகள் takes away the teachers from their classroom responsibilities. இவைகள் MHRD - School Education Department விளக்கங்களை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. தனது ஆணைகள் சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக உள்ள தேர்தல் ஆணையம், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிமுறைகளை நோக்கங்களை கவனத்தில் கொள்ளாதது வேதனையும் கல்வி பணியை பாதிப்பதுமாக உள்ளது.
தற்போது தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளிலும் (தற்போது ஆங்காங்கே ஊராட்சி பகுதிகளிலும்) ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் இப்பணிகள் இல்லாத ஊர்களின் ஆசிரியர் சமூகம் இதன் பாதிப்பை உணரவில்லை, தடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் இப்பணிகளை செய்யும் ஆசிரியர்களிடம் படிக்கும் பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கப்படுவது அந்த ஆசிரியர்களுக்கே தெரியும். இக்குழந்தைகளுக்கம் இந்த ஆசிரியர்களுக்கும் கல்வி உரிமை சட்டம் பொருந்தாதோ?
List of BLO's என்ற தேர்தல் ஆணை இணைய பகுதியில் இப்பணிகள் செய்யும் ஆசிரியர் பெயர்களைக் காணலாம்.
கல்வி உரிமை சட்டம் முழுமையாக்கப்பட ஆசிரியர்கள் கல்வி சாரா பணிகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
செய்தி பகிர்வு: திரு.தாமஸ் இராக்லேண்டு, திருச்சி

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.