Pages

Saturday, May 16, 2015

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் இளங்கலை மீன்வளப் பட்டப்படிப்பு


பிளஸ் 2 முடித்தோர், பொன்னேரி மீன்வளக் கல்லூரியில், இளங்கலை மீன்வளப் பட்டப்படிப்பு - பி.எப்.எஸ்.ஐ.,யில் சேரலாம்; ஆராய்ச்சிக்கான சிறந்த கட்டமைப்பு வசதிகளும் உள்ளதாக, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலையின் கீழ், பொன்னேரியில் மீன்வளக் கல்லூரி உள்ளது; இங்கு பி.எப்.எஸ்.சி., எனப்படும், இளங்கலை மீன்வளம் என்ற பட்டப்படிப்பு உள்ளது; இதில், ஆண்டுதோறும், 20 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மீன்வளம் படிப்போர், மீன்வளத் துறையில் மீன்வள ஆய்வாளர், மீன்வள சார் - ஆய்வாளர் பணிகளில் சேரலாம்; மீன் மற்றும் இறால் பண்ணை நிர்வகித்தல் மற்றும் சுய தொழிலும் ஈடுபடலாம். கல்லூரி, சென்னை அருகே அமைந்துள்ளது. பழவேற்காடு ஏரி, 15 கி.மீ., தூரத்தில் உள்ளது; இதனால், நன்னீர், உவர்நீர் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உகந்த இடமாக அமையும்; சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.
மீன்வளப் படிப்புக்கான விண்ணப்பங்கள், மே 15ம் தேதிக்கு மேல் வழங்கப்படும். இதுபற்றிய விவரங்களை,www.tnfu.ac.in,www.iftponneri-tnfu.org/index.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். இந்த கல்லூரியில், முதுநிலை மீன்வளப் படிப்பான, எம்.எப்.எஸ்.சி.,யும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The Dean (i/c)
Institute of Fisheries Technology
Ponneri – 601 204
Thiruvallur district
Phone: 044 - 27971556
www.iftponneri-tnfu.org/index.php

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.