Pages

Wednesday, May 20, 2015

பெங்களூரு மாநகரில் பள்ளி மாணவர்கள் நலனுக்காக புதிய விதிமுறைகள்

பெங்களூரு மாநகரில் பள்ளிகள் உள்ள பகுதியில் வாகன போக்குவரத்து இயக்குவதில் சில மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் தினமும் வேகமாக வாகன இயக்கம் அதிகரித்து வருகிறது. மாநகரில் உள்ள பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனியார் வாகனம் பயன்படுத்துவது சாமானியமாகி விட்டது.
இதனால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிகள் இயங்கி வரும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்ப்பது தொடர்பாக நேற்று காலை மாநகர போக்குவரத்து போலீஸ் கமிஷனர் தலைமையில் 56 பள்ளிகள் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. நீண்ட ஆலோசனைக்கு பின் கூட்டத்தில் கீழ் காணும் திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

* பள்ளி/ கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் அந்தந்த பகுதி போக்குவரத்து போலீசார் எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பது.

* மாணவர்களை அழைத்து வரும் தனியார் வாகனங்கள் சாலையில் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க பள்ளி வளாகத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது.

* பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்ல மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் பயன்படுத்தும்படி பெற்றோர் களிடம் அறிவுறுத்துவது.

* கூடுமான வரை ஆட்டோ, டெம்போ, மேக்ஷி கேப் உள்பட தனியார் வாகனங்கள் பயன்படுத்தாமல் தவிர்க்க ஆலோசனை வழங்குவது.

* காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி/ கல்லூரிகள் உள்ள பகுதியில் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படாமல் தவிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருடன் பள்ளி ஊழியர்கள் இணைந்து செயல்படுவது.

* மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி வாகனங்களில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை யரை செய்துள்ளதோ அதை செயல்படுத்துவது.

* பள்ளி வாகனம் ஒட்டும் டிரைவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்வது உள்பட பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து போக்குவரத்து போலீசார் எடுத்துள்ள முடிவுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூடுதல் போக்குவரத்து கமிஷனர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.