அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுத்துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது தடையின்மைச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. சில அரசு அலுவலகங்களில் தடையின்மைச் சான்று பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய வெளியுறவுத் துறை, தடையின்மைச் சான்றுக்குப் பதிலாக புதிய நடைமுறையை பின்பற்றக் கூறியுள்ளது.
இதன்படி அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் தடையின்மைச் சான்று வழங்கும் அதிகாரியின் முகவரிக்கு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதை முன் அறிவிப்பாக படிவம் "ச' இல் தெரியப்படுத்த வேண்டும். அதன் நகலை பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால் போலீஸ் அறிக்கை பெற்று பாஸ்போர்ட் வழங்கப்படும். ஊழியருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் சென்று தெரிவிக்க வேண்டும். பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதற்குரிய "ச' படிவத்தை பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
publish passport form
ReplyDeleteplease publish passport படிவம் "ச' form.
ReplyDelete