Pages

Tuesday, May 19, 2015

மத்திய அரசு பணிக்கான தேர்வு வயது வரம்பு தளர்த்தப்படுமா?

குரூப் - பி மற்றும் குரூப் - சி' பணிகளுக்காக, இந்தாண்டு நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான (சி.ஜி.எல்.இ.,) வயது வரம்பை, தளர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தேர்வு குறித்து, பணியாளர் தேர்வு ஆணையமான - எஸ்.எஸ்.சி., ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், விண்ணப்பதாரரின் வயது வரம்பு, 2015 ஆக., 1ம் தேதி அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: வயது வரம்பை தளர்த்துவது தொடர்பாக, ஏராளமான விண்ணப்பதாரர்களிடம் இருந்து, அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதனால், இந்தாண்டு, ஜன., 1ம் தேதி நிலவரப்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை எட்டியவர்களுக்கும், ஒருமுறை சலுகையாக, தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.