Pages

Monday, May 25, 2015

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை

தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள் அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு இல்லை என்றால், வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையில் விண்ணப்பிக்கலாம். வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையைத் தாண்டி, பிற பகுதி வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்க முடியாது. 


மாணவர் மைனராக இருந்தால், பெற்றோர் பெயரிலும், மேஜராக இருந்தால், மாணவர் மற்றும் பெற்றோர் இருவரின் பெயரிலும், வங்கிக் கடன் அளிக்கப்படும்.
கடன் தொகை, 4 லட்சம் ரூபாய் வரை, எவ்வித உத்தரவாதமும் தேவையில்லை. 4 லட்சம் முதல், 7 லட்சம் ரூபாய் வரை, மூன்றாம் நபர் உத்தரவாதம் அவசியம்; 7 லட்சம் ரூபாய்க்கு மேல், வாங்கும் கல்விக் கடனுக்கு, கடன் தொகை அளவுக்கான, சொத்தை உத்தரவாதமாக அளிக்க வேண்டும்.


கடன் கோரும் விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்தின் உண்மை நகல், படிப்புக் காலம் முடியும் வரையிலான, கட்டண விவரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.கல்லூரியில், முதலாம் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்திய பின், கல்விக் கடன் அளிக்கப்பட்டால், கல்லூரியில் செலுத்திய முதலாம் ஆண்டு தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். கல்விக் கட்டணம் அனைத்தும், கல்லூரி நிர்வாகத்துக்கு, வங்கி மூலம் அனுப்பப்படும்.

கல்விக் கடனுக்கு, படிப்பு முடியும் வரையும், படிப்பு முடித்த ஓராண்டு வரையும் வட்டி இல்லை. கல்விக் கடனை திருப்பி செலுத்த, உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு, 60 மாதங்களும், வெளிநாட்டில் படிப்போருக்கு, 84 மாதங்கள் வரையும் அவகாசம் தரப்படுகிறது.கல்லூரி சேர்க்கை உறுதியான அனைவருக்கும், கல்விக் கடன் பெறும் தகுதி உண்டு. படிக்கும் காலத்தில், ஒவ்வொரு, செமஸ்டர் அல்லது ஆண்டு பருவத்தேர்வுகளில், தேர்ச்சி பெற வேண்டும். ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியுற்றாலும், 
உடனடியாக அடுத்து நடக்கும் தேர்வில், தோல்வியுற்ற பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையேல், கல்விக் கடன் பாதியில் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.