Pages

Tuesday, May 26, 2015

பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: புதுக்கோட்டை தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

புதுக்கோட்டை காமராஜபுரம் 25–ம் வீதியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவர் கீழ 2–ம் வீதியில் சொந்தமாக நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 25).


இவர் புதுக்கோட்டை அருகே ராசாப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் மதிவாணன் என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்த தாகவும், ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.


இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி கடந்த 7–ந் தேதி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புவனேஸ்வரியின் தந்தை கருணாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் புனவேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியர் மதிவாணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) அருமைகண்ணு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தலைமை ஆசிரியர் மதிவாணனை பணி இடை நீக்கம் செய்வதாக கூறினார். இதைத்தொடர்ந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் மதிவாணனை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) அருமைக்கண்ணு உத்தரவிட்டார். அந்த உத்தரவு மதிவாணன் வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.