Pages

Monday, May 4, 2015

துப்பட்டா நெசவு செய்யும் பணி தாமதம்:பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதில் சிக்கல்


கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் நெசவு செய்யப்பட்டு வருகிறது.  கடந்த ஜனவரியில் திருவள்ளூர், வேலுார், நாமக்கல், சேலம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பள்ளி சீருடைக்கான காடா துணிகளை வழங்கி இருக்கவேண்டும். ஆனால் கைத்தறித்துறையினர் காடா துணிகளுக்கு பதில் மாணவிகளுக்கான துப்பட்டா துணியை நெசவு செய்ய உத்தரவிட்டனர்.


இதில் கூலி கட்டுபடியாகாததால் நெசவாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் துப்பட்டா உற்பத்தி செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின் கூலியும், உற்பத்தி அளவும் உயர்த்தப்பட்டதையடுத்து முழு வீச்சில் துப்பட்டா உற்பத்தி நடந்து வருகிறது.ஆனால் இருமாத போராட்டத்தால் கைத்தறி துறைக்கு வழங்க வேண்டிய துப்பட்டாவை வழங்க முடியாத நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அடுத்தமாதம் பள்ளி திறக்கும் போது அனைத்து மாணவிகளுக்கும் துப்பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.கைத்தறி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நெசவாளர் போராட்ட காலங்களில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடுகட்ட ஈரோட்டில் விசைத்தறிகளில் நெசவு செய்து பள்ளிகள் திறக்கும் போது துப்பட்டாவோடு மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.