Pages

Tuesday, May 26, 2015

ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது: சந்தீப் சக்சேனா தகவல்

வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், ஆதார் விவரங்களை இணைக்கவும் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக தமிழகத்தில் 98 சதவிகித மக்களிடம் தகவல் பெறப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இந்த பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மற்ற மாவட்டங்களில் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்று கூறினார்.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணியை, இம்மாதம் 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், தகவல்கள் பதிவேற்றம் செய்யும் பணி, இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவடையும் என்றும் கூறினார்.
முன்னதாக வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் கட்டாயம் எனவும், இல்லையெனில் பெயர் நீக்கப்படும் என்றும் மாவட்ட வாரியாக தேர்தல் அதிகாரிகள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி வந்தனர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.