மூளைச்சாவு அடைந்த மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையின் 6 உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன. சென்னை மேடவாக்கம் கங்கா நகரைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் (56). இவர் சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 22-ஆம் தேதி தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அதையடுத்து அவர் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சையின்போது சுயநினைவை இழந்துவிட்ட அவர், மூளைச்சாவு அடைந்ததாக மே 23-ஆம் தேதி மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அவரது உடல் உறுப்புகளைத் தானமளிக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். அவரது இருதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் ஆகிய ஆறு உடலுறுப்புகளும் தானமாகப் பெறப்பட்டன.
கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் அரசு மருத்துவமனைக்கும், கண்கள், இருதயம் ஆகிய உடலுறுப்புகள் சென்னையில் உள்ள பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் தானமளிக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.