Pages

Friday, May 29, 2015

திட்டமிட்டபடி ஜூன்.1ம் தேதி பள்ளி திறக்கப்படும்: இயக்குநர்


பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள தால், மாணவர் நலன் கருதி, பள்ளி திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர், தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.


இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் மத்தியில், ஒருவித குழப்பம் நிலவி வருகிறது. இதுகுறித்து, தினமும், மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, நேரடியாகவும், போன் வாயிலாகவும், பெற்றோர் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:

பள்ளி திறக்கும் தேதியில், எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்.பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. பெற்றோர், எவ்விதகுழப்பமும் அடைய தேவையில்லை.இவ்வாறு, அவர்தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.