Pages

Saturday, May 23, 2015

இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., காலி பணியிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடக்கிறது. பொது ஒதுக்கீடுதாரர்களுக்கு இன்றும், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நாளையும் தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வை, 1.66 லட்சம் பேர் எதிர்கொள்கின்றனர். அதற்காக, 32 மாவட்ட தலைநகரங்களில், 114 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில், அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி உட்பட, 22 மையங்களில் தேர்வு நடக்கிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்ற, சென்னை, கிண்டி, பட்ரோடு பகுதியை சேர்ந்த, திருநங்கை ப்ரித்திகா யாஷினி உட்பட, 50க்கும் மேற்பட்டோருக்கு, நுழைவுச்சீட்டு தரப்பட்டு, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.