Pages

Friday, May 22, 2015

தமிழக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் ஜெயலலிதா

தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை காலை 11 மணியளவில் பதவியேற்கிறார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன், தமிழக அமைச்சர்களாக ஓ.பன்னீரசெல்வம், ஆர். வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், உள்ளிட்ட பலர் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கே.வி. ராமலிங்கம், கே.டி.எம். சின்னையா, கோகுல இந்திரா, செந்தில் பாலாஜி, வளர்மதி, செல்லூர் ராஜூ, காமராஜ் ஆகியோரும் நாளை அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புகள் உள்ளன.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன், 29 பேர் தமிழக அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.