பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, 104 தொலைபேசி சேவை மையத்தில் 7,500 மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர். மாணவிகளைக் காட்டிலும் மாணவர்களே அதிக அளவில் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து 104 சேவை அதிகாரிகள் கூறியது: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலையில் இருந்தே அழைப்புகள் வரத் தொடங்கின. பிளஸ் 2 மாணவர்களை விட பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிக அளவில் அழைத்தனர். பெரும்பாலான அழைப்புகள் மாணவர்களிடம் இருந்து வந்தன. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை,
தேர்வு சமயத்தில் கவனம் படிப்பில் செலுத்தவில்லை, தற்கொலை எண்ணம், மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களுக்காக அதிக அழைப்புகள் வந்தன. வியாழக்கிழமை சுமார் 7,500 அழைப்புகள் வந்துள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர். எதிர்பார்த்த தேர்வு முடிவுகளைப் பெறாத 19 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.