Pages

Thursday, May 21, 2015

10 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 41 மாணவர்கள் முதலிடம்

சென்னை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று  காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,827 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 298 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவர்கள் எழுதினர். 


இவர்களில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்கள். 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 பேர் மாணவிகள். தனித்தேர்வர்களாக 50 ஆயிரத்து 429 பேரும் தேர்வு எழுதினர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 578 பள்ளிகளில் இருந்து 28 ஆயிரத்து 124 மாணவர்களும், 29 ஆயிரத்து 230 மாணவிகளும் 209  தேர்வு மையங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 291  பள்ளிகளில் இருந்து 9 ஆயிரத்து 703  மாணவர்களும், 9 ஆயிரத்து 856 மாணவிகளும் 48 மையங்களில் தேர்வு எழுதினர்.

அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு, மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதனை தொடர்ந்து அவர்களின்  தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

இதில் சென்னை சேலையூர் சியோன் பள்லி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 498 மதிப்பெண்கள் பெற்று 192 இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 540 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

சென்னை கரூர் நாமக்கல், தஞ்சை, அரியலூர், புதுச்சேரி, காரைக்கால், பள்ளி மாணவர்களும் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.