Pages

Thursday, April 2, 2015

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள டி.இ.டி வழக்குகள் விரைவாக முடிப்பதில் இழுபறி....

தமிழக அரசு டி.இ.டி வழக்கினை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் கடந்த விவாதத்தின் போது இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கொண்டமையால் இவ்வழக்கு வரும் 13.04.2015 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதிலும் வாதம் நடைபெற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மேலும் கால அவகாசம் கேட்பதால் வரும் மே மாதம் நீதிமன்ற விடுமுறை என்பதாலும் இவ்வழக்குகள் மே மாதத்திற்குள் முடிவதில் சிக்கல் நீடிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையினை 2 தடவை படித்த பின்னரே இறுதிக்கட்ட விவாதம் நடைபெறும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மே மாதத்திற்குள் முடியும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.
ஆனால் தமிழகஅரசு நினைத்தால் விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம். தமிழக அரசு முயற்சிக்குமா?

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.